search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன் பட்டத்துடன் முக்கிய விருதுகளையும்  வாரி சுருட்டிய ஆர்சிபி
    X

    சாம்பியன் பட்டத்துடன் முக்கிய விருதுகளையும் வாரி சுருட்டிய ஆர்சிபி

    • எலிஸ் பெர்ரி அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார்.
    • ஷ்ரேயங்கா பாட்டீல் பர்பிள் தொப்பி மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்றார்.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த வரும் அறிமுகமானது. ஐந்து அணிகள் கொண்ட அறிமுகமான முதல் தொடரில் 4-வது இடம் பிடித்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    ஆனால் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் களம் இறங்கியது. கடந்த முறை புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இரண்டு முறை லீக் சுற்றில் தொல்வியடைந்தது. என்றாலும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி, கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையை எலிமினேட்டர் சுற்றில் வெறியேற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப் போட்டியில் ஷ்ரேயங்கா பாட்டீல் அபாரமாக பந்து வீச டெல்லி அணி 113 ரன்னில் சுருண்டது. எலிஸ் பெர்ரி அபாரமாக பேட்டிங் செய்த கடைசி ஓவரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டத்துடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் தொப்பி, வளர்ந்து வீரம் வீராங்கனை விருது, ஃபேர் பிளே விருது என நான்கு விருதுகளையும் ஆர்சிபி வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.

    எலிஸ் பெர்ரி

    9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 347 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் தொப்பியை வென்றார். அவரது ஸ்கோரில் 41 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். சராசரி 69.4 ஆகும். டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் 4 அரைசதங்களுடன் 331 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார்.

    ஷ்ரேயங்கா பாட்டீல்

    ஷ்ரேயங்கா பாட்டீல் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். மற்றொரு ஆர்சிபி வீராங்கனை 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும், மோலினிக்ஸ் 10 போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் வீழ்த்தினர் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

    ஷ்ரேயங்கா வளர்ந்து வரும் வீராங்கனை விருதையும் வென்றார். உ.பி. வாரியர்ஸ் அணியின் தீப்தி சர்மா இந்த தொடரின் மதிப்புமிக்க வீராங்கனை என்ற விருதை வென்றார்.

    மொத்தமாக ஏறக்குறைய அனைத்து விருதுகளும் ஆர்சிபி வீராங்கனைகள் சுருட்டினர்.

    Next Story
    ×