search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை- ரோகித் சர்மா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை- ரோகித் சர்மா

    • ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது.
    • இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதன் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் பலம் வாய்ந்த அணியான மும்பை 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 4-ல் தோல்வியடைந்துள்ளது. நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சக வீரராக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக் விதிமுறையில் தனக்கு உடன்பாடு இல்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்பேக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. கிரிக்கெட் போட்டி என்பது 11 வீரர்களை கொண்டதே தவிர 12 வீரர்களை உள்ளடக்கியது அல்ல. ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சம் விடுபடுகிறது. இந்த விதிமுறையால் துபே, சுந்தர் போன்ற வீரர்களுக்கு பந்துவீச வாய்ப்பு கிடைப்பதில்லை.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    Next Story
    ×