என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
2024 டி20 உலகக் கோப்பை - இந்திய கேப்டனாக தொடர்கிறார் ரோகித் சர்மா
- இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
- இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்தது.
அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கும் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.
"2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்தார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது.