search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சச்சின், டிராவிட் வேற ரகம்.. இப்போதைய பேட்ஸ்மேன்களுக்கு ஈகோ அதிகம்.. சுனில் கவாஸ்கர் காட்டம்
    X

    சச்சின், டிராவிட் வேற ரகம்.. இப்போதைய பேட்ஸ்மேன்களுக்கு ஈகோ அதிகம்.. சுனில் கவாஸ்கர் காட்டம்

    • ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள்.
    • இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    மும்பை:

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களின் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது.

    புஜாராவின் சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த பேட்டிங் சராசரியை முன்னேற்ற இந்திய அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள் எனவும் இப்போதைய வீரர்கள் இகோ பார்க்கிறார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் அவர்களை அழைத்து இந்திய அணி நிர்வாகம் பேச வேண்டும். உன்னுடைய பேட்டிங் யுக்தி என்ன ஆனது? அதை முன்னேற்ற நீ என்ன செய்து வருகிறாய் என்று பேச வேண்டும்.

    சிறு சிறு மாற்றங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரேந்திர சேவாக்கை அழைத்து நீ தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகிறாய். இதனால் பேட்டிங் போசிஷனை நீ ஆப் ஸ்டம்புக்கு மாற்று என்று நான் அறிவுரை கூறினேன்.இந்த அறிவுரையை அவர் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த பணியை பயிற்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.


    ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள். பேட்டிங்கில் எனக்கு இந்த குறை இருக்கிறது, அதனை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்வதில் எங்களுக்கும் ஈகோ கிடையாது. வந்து கேட்ட அவர்களுக்கும் ஈகோ கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் வந்து எங்களிடம் பேசுவதில்லை.

    இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நானும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்று அவர்களை குழப்ப விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    Next Story
    ×