search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நாசர் ஹுசைன் சொன்னதை செய்துவிட்டீர்கள்- ஆண்டர்சனை வாழ்த்திய சச்சின்
    X

    நாசர் ஹுசைன் சொன்னதை செய்துவிட்டீர்கள்- ஆண்டர்சனை வாழ்த்திய சச்சின்

    • 2002-ல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன்.
    • நீங்கள் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவீர்கள் என்று நாசர் ஹுசைன் என்னிடம் சொன்னார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியுடன் இங்கிலாந்தின் நட்சத்திர ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    கடந்த 2002-ல் அறிமுகமாகிய அவர் சச்சின், விராட் கோலி போன்ற நிறைய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தவர். அவர் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் (200) அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விடை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஹேய் ஜிம்மி. உங்களின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். 2002-ல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன். அப்போது நாசர் ஹுசைன் நீங்கள் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவீர்கள் என்ற மிகப்பெரிய கருத்தை என்னிடம் சொன்னார். அதை நிரூபித்துள்ள நீங்கள் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றவில்லை.

    உலகின் மற்ற ரசிகர்களுக்கும் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை கொடுத்தீர்கள். உங்களுடைய ஆட்டத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் உங்களுக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி கிடையாது. ஏனெனில் புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் நீங்கள் வித்தியாசமானவர். அதை வைத்து நீங்கள் பேட்ஸ்மேன்களின் வாழ்க்கையை கடினமாக்கினீர்கள். பலருக்கும் ரோல் மாடலாக திகழும் நீங்கள் 188 போட்டிகளில் 704 எடுத்துள்ளது அபாரமானது.

    எளிதாக சொல்ல வேண்டும்மெனில் அற்புதமானது நண்பா. இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இனிமேல் தான் உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இந்த வாய்ப்பில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவிக்கிறேன். அற்புதமான கேரியருக்காக வெல்டன்.

    இவ்வாறு சச்சின் கூறினார்.

    Next Story
    ×