search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லக்னோ உரிமையாளருக்கு கண்டனம் தெரிவித்த தெ.ஆப்பிரிக்க ஜாம்பவான்
    X

    லக்னோ உரிமையாளருக்கு கண்டனம் தெரிவித்த தெ.ஆப்பிரிக்க ஜாம்பவான்

    • உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார்.
    • சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.

    இதனால் கோபமடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா போட்டியின் முடிவில் கேப்டன் கேஎல் ராகுலை திட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலனாது. இதற்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் 16 கோடி சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை திட்டுவது சரியல்ல என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கிரேம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனெனில் அவருடைய அணி முழுமையான தோல்வியை சந்தித்ததால் உணர்ச்சிகள் உருண்டோடின. இருப்பினும் இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.

    என்று கூறினார்.

    Next Story
    ×