search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மும்பை அணிக்காக கிரீன்- சுப்மன் கில் நன்றாக பேட்டிங் செய்தனர்- சச்சினின் நக்கல் டுவிட்
    X

    மும்பை அணிக்காக கிரீன்- சுப்மன் கில் நன்றாக பேட்டிங் செய்தனர்- சச்சினின் நக்கல் டுவிட்

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×