என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இலங்கைக்கு எதிரான தொடர்: முக்கிய வீரர்களை கழற்றி விட்ட பிசிசிஐ- ரசிகர்கள் அதிருப்தி
- ருதுராஜ், குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
- சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன்(ஒருநாள் தொடரில்) ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ், ஜடேஜா உலகக் கோப்பையில் விளையாடினர். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக கூட அவர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ், சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அபிஷேக் சர்மா ஒரு சதம் விளாசினார். ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார். இதை தவிர சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.
இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வருவார் செல்வார் என்பது போலவே இருக்கும். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இடம்பெறுவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார். அப்படி அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்கு அடுத்த தொடரில் அவர் இடம் பெறமாட்டார். இப்படி தான் இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை நகர்கிறது. அந்த வகையில் தற்போதும் அவரை கழற்றி விட்டுள்ளனர்.
நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் இந்திய அணியில் சாம்சன் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. தற்போதும் அவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 அணி விவரம் பின்வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.
ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்