search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    5வது ஒருநாள் போட்டியில் வெற்றி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
    X

    5வது ஒருநாள் போட்டியில் வெற்றி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் மார்க்ரம் 93 ரன்னும், டேவிட் மில்லர் 63 ரன்னும், ஜேன்சன் 47 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் சாம்பா 3 விக்கெட்டும், அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். லபுசேன் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவரில் 193 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 122 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது.

    டி20 தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒருநாள் தொடரை வென்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், மகராஜ் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது ஜேன்சனுக்கும், தொடர் நாயகன் விருது மார்க்ரமுக்கும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×