என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![தென் ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட் பிரிடோரியோ அணி 3-வது வெற்றி தென் ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட் பிரிடோரியோ அணி 3-வது வெற்றி](https://media.maalaimalar.com/h-upload/2023/01/19/1823542-sa.webp)
X
தென் ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட் பிரிடோரியோ அணி 3-வது வெற்றி
By
மாலை மலர்19 Jan 2023 1:36 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ்-ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
- ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தி 3-வது வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்நாட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்டர்ன் கேப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணியை வீழ்த்தியது.
172 ரன் இலக்கை 19.3 ஓவரில் ஈஸ்டர்ன் கேப் அணி எடுத்தது. இரவு நடந்த ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை பிரிடோரியோ கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தி 3-வது வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் அணி 15.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய பிரிடோரியோ அணி 13 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ்-ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கலர்ஸ் தமிழ் சேனலில் தமிழில் வர்ணனை செய்யப்படுகிறது.
Next Story
×
X