search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வங்காளதேசத்துக்கு ரிவேஞ்ச்: டைம் அவுட் Celebrations கொடுத்த இலங்கை- வைரலாகும் வீடியோ
    X

    வங்காளதேசத்துக்கு ரிவேஞ்ச்: டைம் அவுட் Celebrations கொடுத்த இலங்கை- வைரலாகும் வீடியோ

    • நடந்த முடிந்த உலகக் கோப்பை தொடரில் டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் ஆனார்.
    • அதற்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாகதான் இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    சிலெட்:

    இலங்கை அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் முதலில் தொடங்கியது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து வெற்றி கோப்பையை இலங்கை அணி வீரர்கள் பெற்றுக் கொண்டனர். அப்போது வங்காளதேச அணியை வெறுப்பேற்றும் விதமாக அனைத்து வீரர்களும் டைம் அவுட் Celebrations கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இலங்கை வீரர்கள் அப்படி நடந்து கொள்ள இதுவே காரணம். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

    எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

    ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மேத்யூஸ்.

    இதற்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாகதான் இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×