என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை
- முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 167 ரன்கள் எடுத்து வென்றது.
தம்புல்லா:
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 60 ரன்கள் குவித்து அவுட்டானார். ரிச்சா கோஷ் 30 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார்.
ஹர்ஷிகா சமரவிக்ரமா பொறுப்புடன் ஆடி 69 ரன்கள் அடித்தார்.
இறுதியில் இலங்கை அணி 18.4 ஓவரில் 2விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
5 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.