என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 கேப்டனாக சிறந்து விளங்குவார்: SKY-க்கு புகழாரம் சூட்டிய முன்னாள் இந்திய அணி ஃபீல்டிங் பயிற்சியாளர்
- முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம்.
- இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும்.
மும்பை:
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
சூர்யாவை எனக்கு இளம் வயதில் இருந்து தெரியும். சூர்யகுமார் யாதவ், ஒரு இளம் வீரராக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார். இளம் வீரர் என்பதால் எப்போதுமே ஆக்ரோஷமாக இருப்பார். தற்போது நான் அவரை பார்க்கும் போது முதிர்ச்சி அடைந்த வீரராக இருக்கின்றார்.
ஐபிஎல் தொடரிலோ இந்திய அணிக்கோ சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் வழிநடத்தியது கிடையாது. ஆனால் இந்திய அணிக்காக ஒரு எட்டு போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அப்போது நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தேன். அதில் சூர்ய குமார் யாதவ் ஒரு கேப்டனாக சிறந்த ஒரு பணியை செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவும் கேப்டனாக நல்ல பணியை மேற்கொண்டார்.
கேப்டனாக முதலில் இது அவருக்கு கடும் சவால்களை அளிக்கலாம். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்தப் பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஒரு வெற்றிகரமான கேப்டனாக கூடிய அனைத்து தகுதியிலும் அவருக்கு இருக்கின்றது.
தற்போது முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம். இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும். கம்பீருடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கே கே ஆர் அணிக்கு விளையாடும் போது கம்பீரை சூர்யகுமார் யாதவுக்கு நன்கு தெரியும் என்பதால் இருவரும் பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.