search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தடைப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது- சென்னை அணிக்கு15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம்
    X

    தடைப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியது- சென்னை அணிக்கு15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம்

    • 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
    • திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

    முதலில் ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், அங்கு திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

    பின்னர், மழை நின்றதை அடுத்து ஈரப்பதமான மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், மழையால் தடைப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் அடித்த நிலையில், சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மழையால் தடைப்பட்ட இறுதிப்போட்டி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×