என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பையில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு கிடைக்காது- ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்
- இந்திய டி20 அணிக்கு ரோகித், கோலி மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பரிபோக இருக்கிறது.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது. அதேபோல் அவரது ஆட்டம் சமீபத்திய செயல்பாடு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்றே சொல்லலாம்.
இதனால் அவரது முழு திறமையையும் பயன்படுத்த முடியாமல் போனது. டி20 உலக கோப்பையை பொறுத்தவரை சொல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பே கிடையாது.
என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.