என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
டி20 உலக கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து? 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்13 Nov 2022 3:17 PM IST
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார்.
- இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. துவக்கம் முதலே நிதானமாக ஆடிய பாகிஸ்தான், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
Next Story
×