என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான மைதானம் தயாராகும் வீடியோ வைரல்
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
- இரு அணிகள் மோதும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நியூயார்க்கில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமான பணிகள் ஒரு மாதம் நிறைவடைந்ததையடுத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மைதானம் 34,000 பார்வையாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 12,500 ரசிகர்கள் இருக்கும் வகையில் ஸ்டேடியத்தின் ஈஸ்ட் ஸ்டாண்ட், கடந்த ஒரு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கிரேன்களுடன் இந்த கட்டுமான பணி நடைபெறும் வீடியோவை பார்க்க சுவாரஸ்மாக உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதான அட்டவணை:
ஜூன் 3: இலங்கை vs தென்னாப்பிரிக்கா
ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து
ஜூன் 7: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான்
ஜூன் 10: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்
ஜூன் 11: பாகிஸ்தான் vs கனடா
ஜூன் 12: அமெரிக்கா vs இந்தியா
2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.