என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்- ஐக்கிய அரபு அமீரக அணிக்கு 153 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இலங்கை
- இலங்கை வீரர் நிசாங்க 74 ரன்கள் குவித்தார்.
- ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
கீலாங்:
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் விளையாடி வருகின்றன. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னும் வெளியேறினர். இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 15வது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரில் பனுகா ராஜபக்ச ,சரித் அசலங்கா ,தசுன் ஷானகா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஜாகூர்கான் 2 விக்கெட்களையும், அப்சல்கான், ஆர்யன் லக்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடி வருகிறது.