search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சூப்பர் 8-இல் முதல் வெற்றி - 47 ரன்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
    X

    சூப்பர் 8-இல் முதல் வெற்றி - 47 ரன்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • பசல்ஹாக் பரூக்கி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் ஹசரதுல்லா சசாய் மற்றும் இப்ராகிம் சத்ரான் 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 17 ரன்களை சேர்த்தார்.

    அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்களை சேர்த்தார். நஜிபுல்லா சத்ரான் 19 ரன்களை சேர்க்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்திய சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×