என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்- கங்குலி அறிவிப்பு
Byமாலை மலர்22 July 2022 12:01 PM IST
- இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் இந்த போட்டியை நடத்த இயலாத சூழலில் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது.
- இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
மும்பை:
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அங்கு இந்த போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் இந்த போட்டியை நடத்த இயலாத சூழலில் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது. இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
Next Story
×
X