என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    • நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.
    • தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

    அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர்.தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்.குறிப்பாக அலெக்ஸ் ஹாலெஸ் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.

    சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் சான்ட்னெர் பந்துவீச்சில் 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.

    மறுபுறம் மொயீன் அலி (5) ரன்கள் , லியாம் லிவிங்ஸ்டன் (20) ,ஹார்ரி புரூக்( 7 ) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×