search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக்:  உ.பி அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்
    X

    மகளிர் பிரீமியர் லீக்: உ.பி அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

    • குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
    • குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

    ஆண்கள் ஐபிஎல் போன்று பெண்கள் ஐபிஎலாக பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.

    பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இதில், குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், உ.பி அணி 170 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. தற்போது உ.பி அணி 6.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×