search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தொடரும் ஹூடாவின் அதிரடி- பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி
    X

    ஹூடா

    தொடரும் ஹூடாவின் அதிரடி- பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

    • அதிரடியாக விளையாடிய ஹூடா 59 ரன்கள் எடுத்தார்.
    • உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டெர்பிஷயர்:

    டெர்பிஷயர்-இந்தியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா, ஹர்சல் படேல், இஷான் கிஷன், சாஹல், திரிபாதி ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷயர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்ட்வா-சாம்சன் ஜோடி களமிறங்கியது. ருதுராஜ் 3 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஹூடா-சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 38 ரன்கள் எடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹூடா 59 ரன்னில் வெளியேறினார். அயர்லாந்தை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஹூடாவின் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 36 தினேஷ் கார்த்திக் 7 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    16.4 ஓவரில் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    Next Story
    ×