என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
உலக கோப்பையை இந்தியா வெல்லாததால் மனமுடைந்தது: கபில் தேவ்
- கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
- 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டராக ஜொலித்தவருமான கபில் தேவ் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் மனமுடைந்து விட்டது. இது மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்தது.
இன்றைய கிரிக்கெட் வீரர்கள், மன்னிக்கவும் அவர்களால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். விளையாடும் முறை மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாம் புரிந்து கொள்ளாததை கற்றுக் கொள்வோம்.
ஒருநாள் போட்டியில் நான் ஒருமுறை பந்து வீசவில்லை. இதை நினைவில் வைத்து இருந்தால் நான் கிரிக்கெட் விளையாடி இருக்க மாட்டேன்.
நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைஞர்கள் நம்மை விட சிறந்தவர்கள். அவர்களை வழி நடத்த எங்களுக்கு அனுபவம் உள்ளது. அவர்களை சிறப்பாக வழிநடத்த இயலும்.
பள்ளி நாட்களில் இங்கு விளையாடும் போதெல்லாம் சிறப்பாக விளையாடிய நினைவுகள் இருக்கிறது. இதனால் சென்னை எனக்கு பிடித்த கிரிக்கெட் மைதானமாகும்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.
கபில் தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் 2-வது முறையாக உலக கோப்பை கிடைத்தது. கபில் தேவ், டோனி வரிசையில் ரோகித்சர்மாவால் இணைய முடியவில்லை.
அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை இழந்தது. உலக கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கபில் தேவ், டோனிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.