search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தோனியுடன் விளையாடியதை பாக்கியமாக கருதுகிறேன்- ரஷித் கான்
    X

    தோனியுடன் விளையாடியதை பாக்கியமாக கருதுகிறேன்- ரஷித் கான்

    • தற்போது தன்னுடைய உடல் நிலை நன்றாக இருப்பதை உணர்கிறேன்.
    • மிக விரைவில் முழு உடல் திறனை எட்டுவேன்.

    அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி 11 பந்தில் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார்.

    இந்த போட்டியில் தோனிக்கு எதிராக விளையாடிய அனுபவம் குறித்து ரஷித் கான் கூறியதாவது:- நீங்கள் கில் மற்றும் சுதர்சன் இருவரின் ஆட்டத்தை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அவர்கள் விளையாடிய விதத்தை மிகவும் ரசித்தீர்கள், இருப்பினும் வெற்றிப் பக்கத்தில் இருப்பதில் மகிழ்ச்சி.

    இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. தற்போது தன்னுடைய உடல் நிலை நன்றாக இருப்பதை உணர்கிறேன். தனது முதுகு வலி சரியாகி, தற்போது சிறப்பாக களமிறங்கி உள்ளேன். மிக விரைவில் முழு உடல் திறனை எட்டுவேன்.

    நான் தோனிக்கு எதிராக பந்துவீசியுள்ளேன். அவர் விளையாட வரும்போது அது வித்தியாசமான உணர்வாக இருந்தது. அவருடன் விளையாடுவது எங்களுக்கு நல்ல ஆற்றலை கொடுத்தது. அவருடன் விளையாடியதை பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

    முன்னதாக, ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ்வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார். உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.

    டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.

    இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×