என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இந்தியா தரமான அணி என்பதை நிரூபித்துள்ளது- ரோகித் சர்மா பெருமிதம்
- இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.
- கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 260 ரன்கள் என்ற இலக்கினை 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஐந்து விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
ஹார்டிக் பாண்டியா தொடர் நாயகனாகவும், ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்:-
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வந்த போது ஒரு அணியாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது. ஆனால் இம்முறை நாங்கள் டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்தில் எங்களது டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் ஹார்டிக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து எங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது மிக முக்கிய நபராக மாறி உள்ளார். அதே வேளையில் ஹர்த்திக் பாண்டியாவும் தற்போது பந்து வீச்சில் தனது அசத்தலான செயல்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார், ஒரு அணியாக இந்த வெற்றியை பெற்றதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டம் இழக்கும் எங்களது வீக்னஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஆனாலும் ஒரு தரமான அணி எப்படி வெற்றியை பெறும் என்பதை இந்திய அணி செய்து காண்பித்துள்ளது. இது நம்முடைய பலம் தான். இந்திய அணியில் தற்போது உள்ள இந்த பலத்தின் அடிப்படையில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம். அதன்படி இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்