என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 கிரிக்கெட்டின் ஒரு போட்டியில் சிக்சர் அடிக்காத அணிகள்: முதல் இடத்தை பிடித்தது இந்தியா -நியூசிலாந்து
- 2021-ம் ஆண்டு 238 பந்துகள் விளையாடிய வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் இருந்தது.
- 2021-ம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் 207 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவரின் 5-வது பந்தில்தான் வெற்றி பெற்றது. மைதானம் குறித்து இரு அணி கேப்டன்களும் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த வெற்றி மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்று சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் இரு அணிகளும் 8 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளது. ஆனால், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 239 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத அணிகள் என்ற சாதனையை படைத்துள்ளன.
டி20 கிரிக்கெட்டில் இந்தியா -நியூசிலாந்து 239 பந்துகள் சந்தித்து ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் மற்றும் மைதானம் பின்வருமாறு:-
2023 - 239 பந்துகள் - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் - லக்னோ ஒரு சிக்சர் கூட இல்லை.
2021 - 238 பந்துகள் - வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் - மிர்பூர் - ஒரு சிக்சர் கூட இல்லை.
2010 - 223 பந்துகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் - கார்டிஃப் - ஒரு சிக்சர் கூட இல்லை.
2021 - 207 பந்துகள் - இலங்கை மற்றும் இந்தியா அணிகள் - கொழும்பு - ஒரு சிக்சர் கூட இல்லை.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது.