search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெற்றிக்கு தல தான் காரணம் - சென்னையை கிண்டல் செய்த பஞ்சாப்!
    X

    வெற்றிக்கு 'தல' தான் காரணம் - சென்னையை கிண்டல் செய்த பஞ்சாப்!

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
    • வெற்றியை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பஞ்சாப் அணி பல்வேறு போஸ்டர்களை பதிவிட்டும் வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

    சென்னை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்இ ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சிறப்பாக ஆடிய ருதுராஜ் அரைசதம் அடிக்க, ரஹானே 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    நேற்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது.

    இதையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார்.

    பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றியை தொடர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் பஞ்சாப் அணி பல்வேறு போஸ்டர்களை பதிவிட்டும் வருகிறது.

    பஞ்சாப் அணியின் மற்றொரு பதிவில் விஜய் சேதுபதியின் படத்தை பதிவிட்ட Done and dusted... என்றும், விஜய்யின் புகைப்படத்தை வைத்து சிஎஸ்கேவிற்கு எதிராக 5வது முறை வெற்றி (5th consecutive win against CSK) பெற்றுள்ளோம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

    இது தவிர தனது பாயிண்ட்ஸ் டேபிளை வெளியிட்டு பஞ்சாப் அணி 7 வது இடத்தை பிடித்ததற்கு தல (தோனி) தான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

    இதுபோன்ற பஞ்சாப் அணியின் கிண்டலான பதிவுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×