search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள்... டோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுத்தி
    X

    டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள்... டோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுத்தி

    • நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • டெஸ்ட் போட்டிகளில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.

    டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், கேப்டன் டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனியின் பேட்டிங் சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார். ஸ்டுவார்ட் பிராட் வீசிய பந்தில் சிக்சர் அடித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டோனியுடன் 12வது இடத்தை பகிர்ந்துள்ளார். டோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்சர் அடித்திருந்தார். சவுத்தி 131வது இன்னிங்சில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

    Next Story
    ×