search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிஎன்பிஎல்: 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    டிஎன்பிஎல்: 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    • முதலில் விளையாடிய சேப்பாக் அணி 156 ரன்கள் விளாசினர்.
    • இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஸ் குமார் 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் தவிர மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அபிஷேக் தன்வார் (26 ரன்கள் 8 பந்துகள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார். சேலம் தரப்பில் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சேலம் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக்- கவின் களமிறங்கினர். இருவரும் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அபிஷேக் 16 பந்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஜேந்திரன் 9 பந்தில் 1 ரன்களும் கவின் 22 பந்தில் 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இப்படி அனைவரும் அதிரடியாக விளையாட திணறினர். அடுத்து வந்த ராபின் பிஸ்ட்- முஹம்மது அட்னான் கான் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். முஹம்மது அட்னான் கான் 31 ரன்னிலும் ராபின் பிஸ்ட் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஸ் குமார் 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார். அதில் 4 சிக்சர் 1 பவுண்டரி ஆகும். கடைசி வரை போராடிய அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

    இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×