என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி சேலம் அணி முதல் வெற்றி
- 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
- விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷிவம் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விமல்குமார் (47 ரன்), பாபா இந்திரஜித் (51 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசையில் தினேஷ் ராஜ் (20 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய சேலம் அணிக்கு எஸ்.அபிஷேக்கும் (28 ரன்), விக்கெட் கீப்பர் கவினும் (41 ரன்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் ஆர்.விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.
சேலம் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் 51 ரன்களுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.
திண்டுக்கல் சுழல் சூறாவளிகள் ஆர்.அஸ்வினும் (4 ஓவரில் 24 ரன்), வருண் சக்ரவர்த்தியும் (27 ரன்னுக்கு ஒரு விக்கெட்) ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அவர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.
2-வது லீக்கில் ஆடிய சேலத்துக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றிருந்தது. திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்