என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டிஎன்பிஎல்: சோனு யாதவை அதிக தொகைக்கு வாங்கியது நெல்லை ராயல் கிங்ஸ்
- அதிக தொகையாக பாபா அப்ரஜித் ரூ.10 லட்சத்துக்கும் விஜய் சங்கர் ரூ.10.25 லட்சத்துக்கும் ஏலம் போயிருந்தனர்.
- இதுவரை நடந்த ஏலத்தில் சோனு யாதவ் அதிக தொகைக்கு ஏலம் போனார்.
சென்னை:
டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. அவர் ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் போனார்.
இதுவரை எடுக்கப்பட்ட ஏலத்தில் சோனு யாதவ் அதிக தொகைக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.