என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இடம் பெறுவது குறித்து ரோகித் விளக்கம்
- இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
- இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மும்பை:
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-
நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்