என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாட எங்களுக்கும் ஆசைதான்- பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்
- மகளிர் பிரீமியர் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது.
- மகளிர் பிரீமியர் லீக் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன. இந்த 5 அணிகளுக்கும் வீராங்கனைகளை உறுதி செய்ய மும்பையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 5 அணி நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர்.
இந்நிலையில் மகளிர் பிரீமியர் போட்டியில் விளையாட ஆசையாக உள்ளது என்று பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இதில் பல நாடுகளில் உள்ள வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஆண்கள் ஐபிஎல் போலவே மகளிர் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவில்லை.
இது குறித்து பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பிஸ்மா கூறியுள்ளதாவது:-
பெண்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது. மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட எங்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அது எங்கள் கையில் இல்லை என்றும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.