என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
அயர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அமெரிக்கா
- அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- மொடோனி - சைதேஜா முக்கமல்லா ஆகிய இருவரும் அரை சதம் அடித்தனர்.
சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் அமெரிக்க அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டெய்லர் - மொடோனி களமிறங்கினர். 23 ரன்னில் டெய்லர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் படேல் முதல் பந்திலேயே வந்த வேகத்தில் வெளியேறினார். இதனையடுத்து மொடோனி - சைதேஜா முக்கமல்ல ஜோடி சிறப்பாக ஆடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ரன் அவுட்டால் பிரிந்தது. சைதேஜா முக்கமல்லா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கஜானந்த் 10 ரன்னிலும் அபிஷேக் 0 ரன்னிலும் மொடோனி 55 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 42.4 ஓவரில் அமெரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.