search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    காயத்துடன் களம் கண்ட பாபா இந்திரஜித்.. வைரலாகும் புகைப்படம்
    X

    காயத்துடன் களம் கண்ட பாபா இந்திரஜித்.. வைரலாகும் புகைப்படம்

    • முதல் அரையிறுதியில் தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். இவர் இந்த போட்டியில் காயத்துடன் விளையாடியுள்ளார். கழிவறையில் தவறி விழுந்ததால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாயில் பிளாஸ்திரி போட்டு விளையாடினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×