search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைக்கவிருக்கும் விராட் கோலி
    X

    டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைக்கவிருக்கும் விராட் கோலி

    • நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.
    • விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

    சிட்னி :

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்கள் விளாசினார். தொடர்ந்து இரண்டு அரைசதம் மற்றும் ஒரு முறை கூட ஆட்டம் இழக்காமல் விராட் கோலி பட்டையை கிளப்பி வருகிறார்.

    நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனையை படைத்திருக்கிறார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் விராட் கோலி 23 போட்டிகளில் விளையாடி தற்போது 989 ரன்கள் விளாசி இருக்கிறார்.

    இதன் மூலம் இந்த பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் ஒட்டு மொத்தமாக டி20 உலகக்கோப்பையில் ஆயிரம் ரன்கள் எடுத்த 2 வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார். முதல் இடத்தில் இலங்கை வீரர் ஜெயவர்தனே உள்ளார். இன்னும் 27 ரன்கள் கூடுதலாக அடித்தால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்து விடுவார்.

    இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா 904 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பை முடிவில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டாப் 2 இடத்தை பிடிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று டி20 உலகக்கோப்பையில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் பட்டியலில் விராட் கோலி 89.9 சராசரியை வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.

    இரண்டாவது இடத்தில் 44.6 சராசரியுடன் பீட்டர்சனும், மூன்றாவது இடத்தில் 40.6 சராசரி உடன் டுமினியும், நான்காவது இடத்தில் 39.1 சராசரி உடன் ஜெயவர்த்தனைவும் , ரோகித் சர்மா 37.7 சராசரியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

    Next Story
    ×