என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கோலிக்கு பதில் பண்ட் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்- இந்திய முன்னாள் வீரர் கருத்து
- விராட் முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
- ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்டீஸ் அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது.
இந்திய அணி சூப்பர் சுற்றுக்கு முன்னேறினாலும் தொடக்க வீரரான விராட் கோலியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கிய வரும் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.
முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோலி தொடக்க வீரராக விளையாடுவதை விட 3-வது விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது.
மேலும் 5-வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும்.
இவ்வாறு பண்ட் கூறினார்.