என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
விராட் கோலிக்காக உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும்- விரேந்தர் சேவாக்
- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரையில் கிட்டத்தட்ட 45 நாட்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் இந்த முறை உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும். அதிலேயும் பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும். அப்போது அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை இங்கிலாந்து தட்டிச் சென்றது. ஆஸ்திரேலியாவும் 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்த நிலையில், இந்த உலக கோப்பையை விராட் கோலிக்காக இந்திய அணி வெல்ல வேண்டும். ஏனென்றால், அவர் ஒரு சிறந்த வீரர், சிறந்த மனிதர், அவர் எப்போதும் மற்ற வீரர்களுக்கு உதவுகிறார்.
இதே போன்று பாகிஸ்தானிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.