search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டோனி இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிஸ்டர் கூல் இவர்தான்.. வீரேந்தர் சேவாக்
    X

    டோனி இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிஸ்டர் கூல் இவர்தான்.. வீரேந்தர் சேவாக்

    • இந்த வருட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான் என சேவாக் கூறினார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவ்வப்போது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைகள் மூலமாக பகிர்வது வழக்கம். அந்த வகையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி குறித்து டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 16-ம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.



    இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 393 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 386 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 223 ரன்களை குறித்தது.

    பின்னர் 281 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது எட்டு விக்கெட்டை இழந்து 282 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.


    இந்த போட்டி குறித்து சேவாக் கூறியதாவது:-

    என்ன ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. சமீப காலத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி இதுதான். குறிப்பாக வானிலையை கருத்தில் கொண்டு முதல் நாள் முடிவடைவதற்கு சற்று முன்னதாக இங்கிலாந்து டிக்ளேர் அறிவித்தது துணிச்சலான முடிவாகும். ஆனால் கவாஜா இரண்டு இன்னிங்ஸ்களில் அற்புதமாக விளையாடினார். பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல். அவர் போட்டியை முடித்துக் கொடுத்ததும், அழுத்தமான சூழலில் லயன் உடனான சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது என இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு எனக்கு ஞாபகத்தில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×