search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    85 ஆண்டு கால சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்- வீடியோ
    X

    85 ஆண்டு கால சாதனையை சமன் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்- வீடியோ

    • ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது. கவாஜா 30 ரன்னிலும் க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமானர். வேகப்பந்து வீச்சாளரான இவர் அறிமுக போட்டியில் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் 85 ஆண்டு கால சாதனையை ஷமர் ஜோசப் சமன் செய்துள்ளார்.

    இதற்கு முன்பு டைரல் ஜான்சனுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை ஜோசப் படைத்துள்ளார். 1939-ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஜான்சன் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, ஆண்கள் டெஸ்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 23-வது பந்து வீச்சாளர் ஜோசப் ஆவார்.

    கயானாவில் உள்ள சிறிய கிராமமான பராசராவைச் சேர்ந்தவர், 24 வயதான அவர் முன்னதாக பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் கெமர் ரோச்சுடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்கள் எடுக்க இந்த ஜோடி உதவியது. இறுதியில் ஜோசப் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    Next Story
    ×