என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளோம்- கே.எல்.ராகுல்
- பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு உற்சாகமானது.
- பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி இன்னும் வருத்தமளிக்கிறது.
துபாய்:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 11 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம். எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு ஒரு உற்சாகமானது. நமக்கும் நாமே சவால் விடும் சிறந்த வாய்ப்பு.
கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தது இன்னும் வருத்தமளிக்கிறது. பெரிய போட்டிகளில் விளையாடும்போது ஒவ்வொரு அணியும் பெரிதாக சாதிக்க விரும்புகிறது, துரதிர்ஷ்டவசமாக, அது எங்களுக்கு நடக்கவில்லை. வலுவான பாகிஸ்தானிடம் நாங்கள் ஆட்டமிழந்தோம். எனவே இப்போது அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிற கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் இருந்து வரும் கருத்தால் பாதிக்கப் படமாட்டார்.
அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, அவரை (விராட் கோலியை ) டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்மில் இல்லை என்று நான் உணரவில்லை. இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.