search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்
    X

    டி20 உலகக் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசியுள்ளனர்.
    • 91 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை வெஸ்ட் இண்டீஸ் முறியடித்துள்ளது.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 104 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் குவித்தது.

    இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்:-

    வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024)

    நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014)

    இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016)

    தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)

    இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)

    மேலும் இந்த போட்டியில் நிக்கோளஸ் பூரன் மற்றும் சார்லஸ் இணைந்து ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். உமர்சாயின் ஓவரில் 10 எக்ஸ்ட்ராக்கள் (5 வைடுகள், ஒரு நோ-பால் மற்றும் நான்கு லெக்-பைகள்) அடங்கும்.

    ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:-

    36 - யுவராஜ் சிங் (இந்தியா) எதிராக ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), டர்பன், 2007

    36 - கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அகிலா தனஞ்சய (இலங்கை), கூலிட்ஜ், 2021

    36 - ரோஹித் சர்மா & ரிங்கு சிங் (இந்தியா) எதிராக கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்), பெங்களூரு, 2024

    36 - திபேந்திர சிங் ஐரி (நெதர்லாந்து) எதிராக கம்ரன் கான் (குவைத்), அல் அமேரத், 2024

    36 - நிக்கோலஸ் பூரன் & ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), செயின்ட் லூசியா, 2024

    Next Story
    ×