search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    யார் சிறந்த கேப்டன்? - வந்து விழுந்த கேள்வி.. நேக்காக நழுவிய காம்பீர்.. சொன்னது இதுதான்
    X

    யார் சிறந்த கேப்டன்? - வந்து விழுந்த கேள்வி.. நேக்காக நழுவிய காம்பீர்.. சொன்னது இதுதான்

    • கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    • டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டிகளுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துள்ளார் காம்பீர். கடந்த 2018 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களிலின் ஆட்டம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பவராக உள்ளார்.

    இந்நிலையில்தான் அணியின் வீரராக இருந்த காலத்தில் எம்.எஸ்.டோனி, அணில் கும்ப்ளே ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ள்ள கவுதம் காம்பீரிடம் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.




    இதற்கு பதிலளித்த காம்பீர், இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி, இதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் அவரவருக்கேயான பலங்களும் பலவீனங்களும் இருக்கும். நான் முதல் முதலாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டன்சியில் விளையாடினேன்.

    எனது முதல் ஓடிஐ போட்டி சவுரவ் கங்குலி கேப்டன்சியின்கீழ் அமைந்தது. அணில் கும்ப்ளே கேப்ரான்சியின்கீழ் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன். அவருடன் விளையாடுவதை நான் விரும்பினேன். அவர் அணியை வழிநடத்தும் பக்குவம் எனக்கு பிடிக்கும் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு நழுவியுள்ளார்.

    Next Story
    ×