என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ரோகித் சர்மா- விளக்கம் அளித்த சூர்யகுமார் யாதவ்
- இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
- இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்கியது.
ஆனால் முதல் பாதியில் விளையாடாத ரோகித் சர்மா கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்ததும் அடுத்ததாக மும்பை அணி சேசிங் செய்ய வருகையில் இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக இஷான் கிஷனுடன் களமிறங்கினார். அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.
இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா ஏன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் மைதானம் கொஞ்சம் டிரையாக இருந்ததால் இரண்டாவது பேட்டிங்கிற்கு மைதானம் நன்றாக ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அதன்படியே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டிக்கு முன்னதாக வயிற்று பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டது.
அதனாலேயே அவர் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பின்னர் அவர் சேசிங்கின் போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.
என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்