search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்தை வெளியேற்ற ஸ்காட்லாந்துடன் மோசமாக விளையாடுவோமா? - பேட் கம்மின்ஸ் விளக்கம்
    X

    இங்கிலாந்தை வெளியேற்ற ஸ்காட்லாந்துடன் மோசமாக விளையாடுவோமா? - பேட் கம்மின்ஸ் விளக்கம்

    • இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும்.
    • ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல போட்டி போட்டு வருகின்றன.

    3 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி 2 வெற்றி 1 டிரா உடன் 5 புள்ளிகளுடனும் 2-ம் இடத்திலும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி 1 டிரா மற்றும் 1 தோல்வி என 3 புள்ளிகளுடனும் 3-ம் இடத்திலும் உள்ளது

    இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்விடைய வேண்டும். இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.

    ஒருவேளை ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றால் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

    இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட், "இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும். எனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஆடவே ஆஸ்திரேலியா அணி விரும்பும், மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள்" என்று பேசியிருந்தார்.

    ஹசல்வுட்டின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட், ஒரு நாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    "ஹசல்வுட் இதை பற்றி நகைச்சுவையாகவே பேசியிருந்தார். ஆனால் அவர் கூறியதை திரித்து அதை பேசுபொருளாக மாற்றியுள்ளனர். நாங்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராக முழு முயற்சியுடன் விளையாடுவோம். அவர்கள் ஒரு வலிமையான எதிரியாக எங்களுக்கு இருப்பார்கள். ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது" என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×