search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட் தொடர்: தென்ஆப்பிரிக்காவை ஒவிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    டி20 கிரிக்கெட் தொடர்: தென்ஆப்பிரிக்காவை ஒவிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

    • 3-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வான் டெர் டுசன் அதிகபட்சமாக 31 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்ட களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 28 பந்தில் 44 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 26 பந்தில் 69 ரன்கள் விளாசினார். கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 36 ரன்கள் அடிக்க 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    Next Story
    ×