என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத் அணியை எளிதாக வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
- முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியால் 126 ரன்களே அடிக்க முடிந்தது.
- டெல்லி அணியின் ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார்.
பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் மூன்று வீராங்கனைகளான வோல்வார்த் (7), மூனி (0), ஹேமலதா (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
6-வது பேட்டராக களம் இறங்கிய பாரதி ஃபுல்மாலி 36 பந்தில் 42 ரன்கள் அடித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் மரிஜான்னே காப், ஷிகா பாண்டே, மினு மானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை மெக் லேனிங் 18 பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிஸ் கேப்சி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையாக ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 13.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லீக் போட்டிகள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆர்சிபி 3-வது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களையும் பிடித்த இந்த மூன்று அணிகளும பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்