என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் பிரீமியர் லீக் சாதனை: இணையத்தை ஆக்கிரமித்த ஆர்.சி.பி மீம்ஸ்கள்
- இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்
- வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2 -வது சீசன் கடந்த பிப்ரவரி 23- ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என 5 அணிகள் இடம் பெற்று விளையாடின.டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.
இறுதி ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் 2024 பட்டம் பெற்றது.
சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்.மேலும்சில வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்.
அதில் ஒரு சில 'மீம்ஸ்கள்' வருமாறு:
தூள்' படத்தில் நடிகை ரீமா சென்-ஐ கவருவதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். அப்போது, திடீரென பறவை முனியம்மா, அந்த காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிவார்.
அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெயிக்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டு உள்ளது.
சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு, நாசர் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார்.
அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டு உள்ளது
அதேபோல நடிகர் வடிவேலு அரசியல் வாதியாக வெள்ளை வேட்டி, சட்டை துண்டு அணிந்து மிரட்டலாக நடந்து வருவது போலவும் அவருக்கு அடியாளாக கம்புடன் விராட் கோலி நடந்து வருவது போலவும் " பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக 16 வருசமாக காத்திருந்த ஒரே டீம்" ..என்ற வாசகத்துடனும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதேபோல கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் உருவாக்கி இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்