search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்திய அணியில் சாகலை சேர்த்திருக்க வேண்டும்- யுவராஜ் சிங்
    X

    அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்திய அணியில் சாகலை சேர்த்திருக்க வேண்டும்- யுவராஜ் சிங்

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×